ரொறொன்ரோ பொலிசார் ஒரே பகுதியில் இடம்பெற்ற ஐந்து வங்கி கொள்ளைகளில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர்.
இக்கொள்ளைகள் டேவிஸ்வில் சுற்றுவட்டாரத்தில் நடந்துள்ளது. நவம்பர் 21 முதல் டிசம்பர் 17-ற்கு இடைப்பட்ட காலத்தில் மதியம் 1-மணியளவில் நடந்துள்ளது.
லோறன்ஸ் அவெனியு மற்றும் டேவிஸ்வில் அவெனியுவிற்கு இடையில் யங் வீதியில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. “lunchtime bandit,” என்ற பட்டப்பெயர் கொண்ட இந்த சந்தேக நபர் வாடிக்கையாளராக வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கி வைத்திருக்கின்றேன் காசு வேண்டும் என மிரட்டுகின்றார்.
இந்த குறிப்புக்கள் நன்றாக இலக்கண பிழையற்ற நோட்டுக்களாக காணப்பட்டதாக புலன்விசாரணையாளர் தெரிவித்தார். நேர்த்தியான 20களின் மத்திய வயது, மதிப்பான, நாகரீக ஆடை அணிந்த தோற்றம் கொண்டவர்.
ஒரே ஆடைகளை தினமும் அணிந்திருப்பார். அதே கோர்ட், தொப்பி என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருட்டுக்கள் ஒன்றின் போது சுரங்கப்பாதையில் செல்லும் போது சந்தேக நபர் பாதுகாப்பு வீடியோவில் பிடிபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல கொள்ளைகளை இந்த மதிப்பற்ற மனிதன் மேற்கொள்வதற்கு முன்னர் பிடிபடவேண்டும் என பொலிசார் கருதுகின்றனர். இடம்பெற்ற ஐந்து கொள்ளைகளில் நான்கு மதியம் 12-முதல்1-மணிக்கிடையில் நடந்துள்ளது.
ஒரு மாதத்தில ஐந்து கொள்ளைகள் மிக மோசமானதென தெரிவித்த பொலிசார் இந்நபரை வீதிகளை விட்டு அகற்ற வேண்டும் என கருதுகின்றனர்.
இந்நபர் குறித்த தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிசாரருடன் 416-808-7350 அல்லது Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477).தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள படுகின்றனர்.
Wednesday, December 21, 2016
விசேட அமைச்சுப் பொறுப்புக்களுக்கு முதலமைச்சர்கள் எதிர்ப்பு
சிறந்த அமைச்சரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண எதிர்ப்பினை வெளிக்காட்டுவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 மாகாண சபைகளிலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், தேசிய அரசாங்கத்தில் தனித்து ஆட்சி செய்ய ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியால் முடியாது.
பாராளுமன்றத்தில் சம அளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளனர்.
இதனால் சுதந்திர கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பத்தின் பெயரில் செயற்படப் போவதில்லை எனவும் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர சக்தி வாய்ந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை. இதனாலேயே பொது அபேட்சகராக எமது கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டது நல்லது மாறாக அவரை தனிமைப் படுத்தும் செயற்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுதந்திர கட்சியின் கொள்கையுடன் செயற்படுவது வரவேற்கக் கூடியது, அவர் அப்படி இருந்தால் மிகவும் பலமான விடயமாகும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் எதிர்காலத்திலும் தேர்தல் காலங்களிலும் இவ்வாறான ஒரு நிலை இருப்பின் அது வரவேற்கத் தக்க விடயமாகும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு அமைச்சுக்களை ஏற்படுத்தி அந்த அமைச்சுக்களுக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் பிரேரணைக்கு எதிர்ப்பை வெளியிடுவது என்று சகல மாகாணங்களினதும், முதலமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.
அந்த பிரேரணையை அரசாங்கம் நிறைவேற்றக்கூடாது என்று தேவப்பிரிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பரிந்துரையின்கீழ் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த விசேட ஏற்பாடு அமைச்சுக்கள் யோசனை டிசம்பர் 25ஆம் திகதியன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சமநிலையில் நிறைவடைந்த இலங்கை- தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி
தென் ஆப்பிரிக்கா சுற்றுலாவின் முதலாவது 3 நாள் பயிற்சி போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
பொட்சேபிஸ்ட்ரூம் சென்வெஸ் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 373 ஓட்டங்களை பெற்றது.
இரண்டாவது நாளின் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அழைப்பு பதினொருவர் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.
போட்டியின் இறுதி நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 4 விக்கட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்று கொண்டது.
இதன்படி போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
அத்தோடு இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி போட் எலிசபெத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11 பேரை பலி கொண்ட சாவகச்சேரி விபத்து! பஸ் சாரதிக்கு பிணை
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் 11 பேர் உயிரிழக்கக் காரணமான வாகன விபத்துச்சம்பவம் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இ.போ.ச பஸ் சாரதியை ஐம்பதாயிரம் ரூபா ஆட்பிணையில்செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்துள்ளது.
சாவகச் சேரி நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் செ-கணபதிப்பிள்ளை முன்னிலையில்சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மூவரின் சாட்சியமும் நீதவான் முன்னிலையில்பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 19ம் திகதி நீதவானால் குறித்த வழக்குத்தவணையிடப்பட்டுள்ளது
Monday, November 7, 2016
புதுக்கட்சியின் தலைவர் யார்? - ஊடகங்களை அச்சுறுத்திய பிரதமர்!
புதுக்கட்சிக்கு கூட்டு எதிர்க்கட்சி எப்போதும் ஆதரவு அளிக்கும். ஆனால் அதன் தலைமைத்துவம் யாரிடம் இருக்கின்றது தொடர்பில் வெளிப்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கடந்த ஆட்சியின் போது அரசாங்க வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே விமல் வீரவங்ச நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
இதன் போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு மகிந்த ராஜபக்ச தலைமை ஏற்பார் என கருத்துகள் கூறப்பட்டு வருகின்றது ஆனாலும் அதன் தலைவர் யார் என்பது இன்னும் உத்தியோக பூர்வமாக அறியத்தரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்பவர் பகிரங்கமாக ஊடகங்களுக்கு அச்சுருத்தல் விடுத்தவர். நாடாளுமன்றத்திலும் ஊடகவியளாலர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டவர்.
ஆனாலும் பிரதமரின் அல்லது வேறுநபர்களுடைய அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய இந்த நாட்டின் ஊடகங்களும் மக்களும் தயாராக இல்லை என்பதே எமது நம்பிக்கை எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Subscribe to:
Posts (Atom)