சிறந்த அமைச்சரை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண எதிர்ப்பினை வெளிக்காட்டுவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 மாகாண சபைகளிலும் எதிர்ப்பு வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும், தேசிய அரசாங்கத்தில் தனித்து ஆட்சி செய்ய ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியால் முடியாது.
பாராளுமன்றத்தில் சம அளவு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு உள்ளனர்.
இதனால் சுதந்திர கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசியக் கட்சியின் விருப்பத்தின் பெயரில் செயற்படப் போவதில்லை எனவும் மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு ஆட்சி மாற்றத்தை கொண்டு வர சக்தி வாய்ந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இல்லை. இதனாலேயே பொது அபேட்சகராக எமது கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார்.
அவ்வாறு தெரிவு செய்யப்பட்டது நல்லது மாறாக அவரை தனிமைப் படுத்தும் செயற்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சுதந்திர கட்சியின் கொள்கையுடன் செயற்படுவது வரவேற்கக் கூடியது, அவர் அப்படி இருந்தால் மிகவும் பலமான விடயமாகும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் எதிர்காலத்திலும் தேர்தல் காலங்களிலும் இவ்வாறான ஒரு நிலை இருப்பின் அது வரவேற்கத் தக்க விடயமாகும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு அமைச்சுக்களை ஏற்படுத்தி அந்த அமைச்சுக்களுக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் பிரேரணைக்கு எதிர்ப்பை வெளியிடுவது என்று சகல மாகாணங்களினதும், முதலமைச்சர்கள் இணங்கியுள்ளனர்.
அந்த பிரேரணையை அரசாங்கம் நிறைவேற்றக்கூடாது என்று தேவப்பிரிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் பரிந்துரையின்கீழ் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த விசேட ஏற்பாடு அமைச்சுக்கள் யோசனை டிசம்பர் 25ஆம் திகதியன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment